Tuesday, 10 July 2018

மாது




இரைதேடும் மண்புழு போல்
மெல்ல நகர்ந்தது
யாழில் இருந்த  அந்த
இரவுநேர தபால் புகையிரதம்.....


ரயில் பெட்டிகளின் முணங்கல் சத்தம்
தாலாட்டுப்பாட
தலைக்கு தலையணையாக
பயணப்பையை  வைத்துக்கொண்டு
உறக்கத்தில் மூழ்கினேன்.....

திடீரென
மெல்லிய மழைத் தூறல்
என் மேனியை நனைத்தது
குளிர் காற்றில் திக்குமுக்காடியபடி தூக்கத்தை கலைத்து,
எழுந்து யன்னல் வழியே  வெளியே பார்த்தால்
மழையில்லை, அருகில்
இருந்தவர்கள் வெட்கையில் வெதும்பிக் கொண்டு இருந்தார்கள்....
என்னவென்று யேசிப்பதற்குள் விடை கிடைத்தது....

எதிரில் இருந்தவன் யன்னல்வழியே கைகழுவி கொண்டு இருந்தான்…


கோபம் பிடரியை பிடித்துஆட்ட அவனை அண்ணாந்து பார்த்தேன்.......
ஏறிய கோபம் டப்பென்று கீழ்இறங்கியது... 
அவன் அருகில் அழகிய மாது...
பொன்னிற மேனியில் மினுங்கியபடி இருந்தாள்.. 
அநேகமாக அச்சிட்டு சிங்களத்து பட்டாகத்தான் இருக்கவேண்டும்...
ஆம் அதேதான்
அவளுடைய தொலைபேசி உரையாடல் அதை காட்டிக்கெடுத்தது....


என் துக்கத்தை கலைத்தவன் தெய்வமானான் ..
மனதுக்குள் அவனுக்கு நன்றியை சொல்லிவிட்டு  மீண்டும் அவளின் அழகு மழையில் நனைய தொடங்கினேன்.....
நான் பார்ப்பதை அவள் கண்டுவிட்டாள்....
லேசாக என்னை பார்த்தாள்..
உதட்டேரத்தில் சிறு புன்னகையுடன் திரும்பினாள்.....
என்மனமோ பேருவகையால் துள்ளிக்குதித்தது....
நான் பார்ப்பதை நிறுத்தவில்லை...
அவளின் அழகில் நனைந்தபடியே கோட்டைவரை வந்தேன்..
இடையில் அவளுடன் பேச எடுத்த எனது எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது.....

கோட்டை வந்ததும் அவள் புறப்பட தயாரானாள்
என்மனமோ செய்வதறியாது தவித்தது…

கதைத்தேதிரவேண்டும் என்று முடிவெடுத்து அவளை நேக்கி புறப்பட என் பயணப்பையை எடுத்து விட்டு திரும்ப எதிரில் அவள்

அவள்...
என் கையை பிடித்து அதற்குள் ஒரு காகிதத்தாள் ஒன்றை வைத்தபடி என் காதோரம் வந்து

"One hourஎக one thousand  witharai... passa mata call karanna" என்றவாறு சொல்லிக் கொண்டே வேகமாக நடையை கட்டினாள் ....
அக்காகிதத்தில் தெலைபேசி எண் இருந்தது..
அப்போது தான் புரிந்தது அவள் அழகிய மாது மட்டுமல்ல விலைமாதுவும் கூட என்று………....


Thailand , Bangkok

THAILAND         Capital      :  Bangkok Currency   : Baht  ( 1 Thai Baht = 5.51 Srilankan Rupee )   Time          : 1:30 hour...